இலக்கியம் என்பது அற நெறி உரைப்பது அல்ல மாறாக பல் வேறு தரப்புகளை முன் வைப்பது. அவற்றை அறிவதின் வழி மனிதர்கள் மேலும் சனநாயகம் அடைகிறார்கள்.
இலக்கியம் தீர்வு அல்ல. தீர்வுகளை நோக்கிய பாதைகளை திறந்து வைப்பதே அதன் முதன்மை பணி.
இது போன்ற புள்ளிகளை தொட்டு செல்கிறது இந்த உரையாடல்.

அண்ணா மகிழ்ச்சி💗
நிஜமாகவே இது ஒரு அறிவுபூர்வமான உரையாடல். குறிப்பாக, அம்மாவுக்கு ஒரு நாள் புத்தகத்தை அத்தையின் இழப்போடு நீங்கள் இயல்பாக இணைத்த விதம் மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. இலக்கியம் வாழ்க்கையோடு எவ்வளவு இயல்பாக கலக்கிறது என்பதை அந்தப் பகிர்வு அழகாக உணர்த்தியது.
உங்கள் சிந்தனைமிக்க பேச்சு தொடர்ந்து புத்தகங்களை வாசிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை மேலும் அதிகரிக்கிறது. வாழ்த்துகள், சாம்ராஜ்!